Tuesday, 18 December 2012

பட்டினத்தார்



 பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம்புலன்கள்தமை

வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர்பால்

செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின்திருவடிக்கன்பு

இல்லாதவன், மண்ணிலேன்பிறந்தேன் ! கச்சியேகம்பனே!



2 கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி

நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே!



3ஊருஞ் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப்பெற்ற

பேருஞ் சதமல்ல, பெண்டீர் சதமல்ல, பிள்ளைகளும்

சீருஞ் சதமல்ல, செல்வஞ் சதமல்ல, தேசத்திலே

யாருஞ் சதமல்ல, நின்தாள் சதங்கச்சி யேகம்பனே





4 ஆற்றில் கரைத்த புளியாக்கிடாமலென் னன்பை யெல்லாம்

போற்றித் திருவுளம் பற்றுமை யாபுர மூன்றெரித்துக்

கூற்றைப் பணிகொளுந் தாளுடையாய், குன்றவில்லுடையாய்

ஏற்றுக் கொடியுடையாய், இறைவா ! கச்சியேகம்பனே!



5 சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த

பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்

அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று

எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே!



6பாராம லேற்பவர்க் கில்லையென்னாமற் பழுதுசொல்லி

வாரமற் பாவங்கள் வந்தணுகாமல் மனமயர்ந்து

பேராமற் சேவைபுரியாம லன்புபெறா தவரைச்

சேராமற் செல்வந்தருவாய், சிதம்பர தேசிகனே.



7 அடியார்க் கெளியவ ரம்பலவாண ரடிபணிந்தால்

மடியாமற்செல்வ வரம்பெறலாம், வையம் ஏழளந்த

நெடியோனும் வேதனுங்காணாத நித்த நிமலனருட்

குடிகாணு நாங்களவர்காணு மெங்கள் குலதெய்வமே.



8 பிறவாதிருக்க வரம்பெறல் வேண்டும், பிறந்துவிட்டா

லிறவாதிருக்க மருந்துண்டு காணிது வெப்படியோ

அறமார் புகழ்த்தில்லை யம்பலவாண ரடிக்கமல

மறவா திருமனமே, யதுகாணநல் மருந்துனக்கே.





9 அத்தனை, முப்பத்து முக்கோடி தேவர்க் கதிபதியை

நித்தனை, அம்மை சிவகாமசுந்தரி நேசனை, யெம்

கூத்தனைப் பொன்னம் பலத்தாடு மையனைக் காணக்கண்கள்

எத்தனை கோடி யுகமோ தவஞ்செய் திருக்கின்றவே.



10 ஐயுந்தொடர்ந்து, விழியுஞ் செருகி, யறிவழிந்து

மெய்யும் பொய்யாகி விடுகின்ற போதொன்று வேண்டுவன்யான்

செய்யுந் திருவொற்றி யூருடையீர், திருநீறுமிட்டுக்

கையுந்தொழப்பண்ணி யைந்தெழுத் தோதவுங் கற்பியுமே.


11 காடோ? செடியோ? கடற்புறமோ? கனமேமிகுந்த

நாடோ? நகரோ? நகர்நடுவோ? நலமேமிகுந்த

வீடோ? புறத்திண்ணையோ? தமியேனுடல் வீழுமிடம்,

நீடோய் கழுக்குன்றி லீசா, உயிர்த்துணை நின்பதமே.


12வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன

சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து

நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று

ஆளாவது எப்படியோ திருக்காளத்தி அப்பருக்கே


13 சிந்தனை யற்றுப் பிரியமுந் தானற்றுச் செய்கையற்று

நினைந்தது மற்று நினையா மையுமற்று நிர்ச்சிந்தனாய்த்

தனந்தனி யேயிருந் தானந்த நித்திரை தங்குகின்ற

அனந்தலி லென்றிருப் பேனத்தனை! கயிலாயத்தனே.


14 நீறார்த்த மேனி யுரோமஞ்சிலிர்த், துளம் நெக்குநெக்குச்

சேறாய்க் கசிந்து கசிந்தே யுருகி, நின்சீரடிக்கே

மாறாத் தியானமுற் றானந்த மேற்கொண்டு மார்பிற்கண்ணீர்

ஆறாய்ப் பெருகக் கிடைப்ப தென்றோ? கயிலாயத்தனே.



15 கையொன்று செய்ய விழியொன்று நாட

கருத்தொன்று எண்ண பொய்யொன்று வஞ்சக

நாவோன்று பேச புலால கமழும் மெய்யொன்று

சார செவியொன்று கேட்க விரும்பியான் செய்கின்ற

பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே


16 அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே! விழியம்பொழுக

மெத்திய மாதரும் வீதிமட்டே! விம்மி விம்மியிரு

கைத்தலமேல் வைத்தழு மைந்தருஞ் சுடுகாடுமட்டே

பற்றித் தொடருமிரு வினைப் புண்ணிய பாவ முமே!'


17 பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்திட்ட பிச்சையெல்லாம்

நாய்போல் அருந்தி நரிபோல் உழன்றுநன் மங்கையரைத்

தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்

சேய்போல் இருப்பர்கண் டீர்உண்மை ஞானம் தெளிந்தவரே.


18 இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்

உருக்கமுடன் கொண்டுவந்தால் உண்பேன் – பெருக்க

அழைத்தாலும் போகேன் அரனேஎன் தேகம்

இளைத்தாலும் போகேன் இனி.


19 சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க

வெற்றம் பலம்தேடி விட்டோமேநித்தம்

பிறந்தஇடம் தேடுதே பேதைமட நெஞ்சம்

கறந்தஇடம் நாடுதே கண்!



20 நச்சவரம் பூண்டானை நன்றாய்த் தொழுவதுவும்

இச்சையிலே தான்அங் கிருப்பதுவும்பிச்சைதனை

வாங்குவதும் உண்பதுவும் வந்துதிரு வாயிலில்

தூங்குவதும் தானே சுகம்.


21 இருக்கும் இடம்தேடி என்பசிக்கே அன்னம்

உருக்கமுடன் கொண்டு வந்தால் உண்பேன்பெருக்க

அழைத்தாலும் போகேன் அரனே! என்தேகம்


1 comment:

jacksonhaack said...

Betway launches in Venezuela - JM Hub
Betway launched its 전라북도 출장마사지 online sports betting operation on Sunday in the country's capital, 포천 출장안마 Betway, which has partnerships with 김포 출장마사지 the 나주 출장마사지 National Football League, 포천 출장샵 is licensed